திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்

🕔 December 7, 2019

திருமணமான பெண்களுக்குான உலக அழகிப் போட்டியில், 2020ஆம் ஆண்டுக்கான கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது.

27 வயதான கெரோலின் ஜுரி – ஒரு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் இரண்டாவது இடத்தை அயர்லாந்து பெற்றுக் கொண்டதுடன், மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் வேஜின் தீவுகள் பெற்றுக் கொண்டுள்ளது.

51 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வெற்றி பெற்றுள்ளார்.

திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை 1984ஆம் ஆண்டு முதலாவது தடவையாக கீடத்தை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ரோசி சேனாநாயக்க அப்போது கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை இதுவரை இரண்டு தடவை வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயராக ரோசி சேனாநாயக்க தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்