கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத் ஆளுநராக நியமனம்; வட மத்திக்கு திஸ்ஸ விதாரண

🕔 December 4, 2019

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அந்த வகையில், இதுவரை 08 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் பெண்களாவர்.

மேல் மாகாணத்துக்கு டொக்டர் சீதா அரபேபொல கடந்த மாதம் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் – ஒரு தொழிலதிபராவார்.

எவ்வாறயினும் இதுவரை வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்