பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, மாணவர்கள் தாக்குதல்: சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் காடைத்தனம்

🕔 November 29, 2019

– ரி. தர்மேந்திரா –

ம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையினை மேற்பார்வையிட வந்திருந்த அதிகாரிகள் மீது, பரீட்சார்த்தி மாணவர்கள் சிலர், இன்று வெள்ளிக்கிழமை மதியம் நடத்திய தாக்குதலில், அதிகாரிகள் காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, மேற்படி அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டனர்.

தாக்குதல் நடத்திய மாணவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேற்பார்வையாளர் ஒருவரும், உதவி மேற்பார்வையாளர்கள் இருவரும் இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கல்லூரியின் கல்வியாண்டு 2019 இற்கு உரிய, மட்டம் – 05, 06 ஐ சேர்ந்த விவசாய டிப்பிளோமா மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

மேற்பார்வையாளர் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் ஆவார். இவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இவரை சத்திர சிகிச்சை சோதனைகளுக்கு உட்படுத்த நேர்ந்தது.

மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மற்றொரு விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு கையிலும், அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கல்லூரியில் பதற்றமும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டதை அடுத்து, சம்மாந்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

மேலும் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்து, பாதிக்கப்பட்ட மூவரின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மேற்பார்வை கடமையில் ஈடுபட முடியாது இருப்பதாக, தொழில்நுட்ப கல்வி திணைக்களத்துக்கு மேற்பார்வையாளர் குழு அறிவித்துள்தாக அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்