பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலம் தெரிவித்துள்ளது.
சபா நாயகர் கரு ஜயசூரியவிடம் தனது முடிவு குறித்து விளக்கமளித்துள்ளதாக, சபாநாயகரின் அலுவலம் இன்று வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
தேர்தல் செயல்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், எதிர்வரும் தேர்தல்களை திறம்பட நடத்துவதற்கும் மஹிந்த தேசபிரிய பதவியில் நீடிப்பது முக்கியம் என்று சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.