ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

🕔 November 28, 2019

நியூஸ் ஹப்’ செய்தி இணைய தள அலுவலகத்தை பொலிஸார் இன்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததாக கூறி, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்தே, இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அந்த நிறுவனத்திலிருந்து அவ்வாறான எந்தவொரு ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்