மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம்

🕔 October 21, 2015

Baby death - 02
– க. கிஷாந்தன் –

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ். கனிஷன் என்ற மூன்று வயது ஆண் குழுந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர். இதன்போது, வீட்டின் பின்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கிணற்றில் குழந்தை விழுந்து கிடந்ததை, தேடுதலில் ஈடுபட்டோர் கண்டுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையை உடனடியாக மீட்டு, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்த போது, குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது.Baby death - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்