பொதுபல சேனா கலைக்கப்படும்: ஞானசார தேரர்
பொதுத்தேர்தலில் பின்னர் காணப்படும் நிலையை ஆராய்ந்த பின்னர் பொதுபல சேனா அமைப்பினை கலைத்துவிடவுள்ளதாக, அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
ஏற்கனவே, பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இதே கருத்தை அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.