றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்: ‘மொட்டு’ ஆதரவாளர்களின் காடைத்தனம் என குற்றச்சாட்டு

🕔 November 24, 2019

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனமூல பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

புத்தளம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை றிசாட் பதியுதீன் மக்கள் சந்திப்புக்கள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்பொருட்டு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனுடன் பயணித்துக் கொண்டிருந்த வாகனத் தொடர் மீதே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்தத் தாக்குதலின் போது காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் றிசாட் அணியினரின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது வன்முறையில் ஈடுபட்டோர் வீதிகளில் டயர்களை எரித்து தடைகளை ஏற்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.

பொதுஜன பெரமுன ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்