கண்டியில் சஜித் தோல்வியடைய காரணம் என்ன: லக்ஷமன் கிரியெல்ல, மனோ ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம்

🕔 November 21, 2019

னாதிபதி தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்சி கண்­டியில் தோல்வியடைவதற்கு மத்திய அதி­வேக வீதி நிர்மாணத்­தில் ஏற்­பட்ட தாமதமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று புதன்கிழமை அலறி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்தமையை அடுத்து, அவருக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற அமைச்­சர்கள் மற்றும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் மனோ கணே­ச­னுக்கும் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்­கு­மி­டையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்­டத்­தில், கண்­டியில் ஐக்­கிய தேசியக் கட்சி தோல்வியடைவதற்கு மத்­திய அதி­வேக வீதி நிர்­மா­ணத்­தில் ஏற்­பட்ட தாம­தமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரிவித்தார்.

இத­னை­ய­டுத்து லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் கருத்தை நிராகரித்த அமைச்சர் மனோ கணேசன், மத்­திய அதி­வேக வீதி நிர்மாண தாமதம் தோல்­விக்குக் கார­ண­மல்ல என்றும், “நீங்கள் கண்­டியில் தேர்தல் பிரசாரப் பணி­களில் முறை­யாக ஈடுபடாமையே தோல்­விக்கு காரணம்” என்றும் சுட்டிக்காட்டியி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து இரண்டு பேருக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வாதம் ஏற்பட்­டி­ருக்­கி­றது. தான் கண்டி மாவட்­டத்தில் அனைத்துப் பிரதேசங்க­ளிலும் ஒழுங்­கான முறையில் பிர­சா­ரங்­களை முன்னெடுத்த­தா­க அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரிவித்திருக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்