கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ , அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோர் தமது பதவிகளை துறப்பதாக அறிவித்தள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து தான் விலகுவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
தனக்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பிற்கும் ஹரின் பெர்ணான்டோ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். .
இதேவேளை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேராவும் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உடன் அமுலுக்குவரும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.