வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

🕔 November 15, 2019

– முன்ஸிப் அஹமட் –

னாதிபதி தேர்தல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்களுடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு, அம்பாறை அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து மாவட்ட செயலகத்தின் ஊடாக வாக்குச் சீட்டுப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்காளர் விவரம்

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கு நாழு முழுவதும் 159,92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

குறிப்பாக தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 203,0038 வாக்காளர்கள் நாளைய தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளர்.

முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 205 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் 398,301 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 503790 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 281, 114 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1258 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதுமாக 12,845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்தக்கது.

மூன்று வகைப் பெட்டிகள்

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள தேர்தலில் மூன்று வகையான வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

கடந்த காலங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த மரப் பலகையிலான வாக்குச் சீட்டுப் பெட்டிகள், அண்மைய தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குச் சீட்டுப் பெட்டிகள் என்பவற்றுக்கு மேலதிகமாக இம்முறை காட்போட் இனால் ஆன வாக்குச் சீட்டுப் பெட்டிகளும் நாளைய தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்குச் சீட்டு அதிக நீளமானதாக உள்ளமை காரணமாக, அதிக வாக்குப் பெட்டிகள் இம்முறை தேவைப்பட்டது. அதனால், செலவைக் குறைக்கும் வகையில் காட்போட் இனால் ஆன வாக்குச் சீட்டுப் பெட்டிகளை இம்முறை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்