பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை நிந்தவூரில்

🕔 November 10, 2019

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள தேர்தல் பிரசாரக் கூட்டம், நாளை திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தலைமையில் இடம்பெறும் இக் கூட்டத்தில், கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்,பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்