கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை: ஐ.தே.கட்சி சேறடிப்பதாக நாமல் குற்றச்சாட்டு

🕔 November 10, 2019
கோட்டாவின் அமெரிக்க கடவுச்சீட்டு

னாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து மீண்டும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

அமெரிக்க பிரஜாவுரிமையினை ரத்துச் செய்தவர்கள் தொடர்பில், அந்த நாடு நேற்றைய தினம் வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டிலிலும், கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை, அந்த நாடு காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடுவது வழமையாகும்.

இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ இப்போதும் அமெரிக்க பிரஜைதான் என்றும், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும் கூட, அவரால் அந்தப் பதவியை வகிக்க முடியாது எனவும் அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமைச்சரின் மேற்படி பதிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதில் வழங்கியிருந்தார்.

அதில், கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்க பிரஜை இல்லை எனத் தெரிவித்து, அதனை நிரூபிப்பதற்கான ஆவணமொன்றினையும் வெளியிட்டுள்ளதோடு, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சேறடிக்கும் பிரசாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டதாகத் தெரிவித்து, நாமல் வெளியிட்ட ஆவணம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்