டொக்டர் ஆகில் அஹமத்தின் புகைப்படக் கண்காட்சி: நாளை தொடக்கம் மூன்று நாட்கள்

🕔 November 9, 2019

– எஸ்.எல். அப்துல் அஸீஸ் –

டொக்டர் எஸ். ஆகில் அஹ்மத்தின் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் நாளை 10, 11, மற்றும் 12ம் திகதிகளில் காலை 09 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை  அக்கரைப்பற்று பாறூக் சரிபுதீன் கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

டொக்டர் ஆகில் அஹ்மத் வனவிலங்கு புகைப்படத்துறையில்  மிகவும் பிரசித்தி பெற்றவராவார். இலங்கையிலும், வெளிநாடுகளிலுலும்  அவர் பல அரிதான வனவிலங்கு புகைப்படங்களை எடுத்துள்ளார். அன்மையில்  கென்யா நாட்டின் ‘மசாய் மாறா’ தேசிய வனத்துக்குச் சென்ற அவர், அங்கு பல தரம்வாய்ந்த படங்களை எடுத்து வெளியீடுகளையும் செய்துள்ளார். 

தனிநபர் ஒருவர் அம்பாறை மாவடடத்தில் புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஒருங்கமைத்து நடத்துகின்றமை, இதுவே முதல்  முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்