இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

🕔 November 9, 2019

ரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் பொருட்டு, இவர் இந்தப் பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்துப் பேசப்பட்டாலும், அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை உடனடியாக இணைத்துக் கொள்வதில் பொதுஜன பெரமுன தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.350

அவ்வாறு தம்முடன் இணைவோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குவதில் உள்ள சிக்கல் நிலையே இதற்குக் காரணமாகும் என்றும் கூறப்படுகிறது.

தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்யப் போவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ள நிலையில், ரணில் ஆதரவு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இவ்வாறு கோட்டா தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தமிழன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்