தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு

🕔 November 7, 2019

மது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி, தனது ஆதரவினை சஜித் பிரேமதாஸவுக்கு அறிவித்தது.

ஆயினும், இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான ரேலோ எதிர்ப்பு வெளியிட்ட போதிலும், நேற்றைய தினம் – தனது ஆதரவை சஜித் பிரேமதாஸவுக்கு ரெலோ வழங்குவதாககத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, தமது கூட்டமைப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்