எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்தை மறிக்க முயற்சித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை – பொல்பிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்திற்கு நேற்றிரவு சிலர் தடை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன்போது, எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த தரப்பினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடைபெற்ற முதலாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.