சாத்தான் வேதம் ஓதலாமா?

🕔 November 1, 2019

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா –

ம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல.

எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான்.

அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம்.

சந்திரிகாவின் கூட்டத்தை கவர் பண்ண வேண்டும். நேரத்திற்கு அவர் வேலை செய்ததில்லை. ஒரு கூட்டத்திற்கு அவர் வர குறைந்தபட்சம் 5 மணி நேரம் தாமதமாகும். அந்த கூட்டத்துக்கு போனால் நாளே சரி.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு சோதனை முடிந்த கையோடு கையடக்க தொலைபேசி நம் கையில் இருக்காது. வாங்கி விடுவார்கள். பாத்ரூம் கூட செல்ல முடியாது. நீரிழிவு நோய் இருந்த சிரேஷ்ட செய்தியாளர் ஒருவர் – ஒரு நாள் பட்ட பாட்டை கண்டு, பாதுகாப்பு அதிகாரிகளே வேதனையுற்று, இறுதியில் மேலதிகாரி ஒருவரின் அனுமதியுடன் அவரை வெளியில் சென்றுவர அனுமதித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திரிகா அப்படி செய்தவரல்ல. அவரின் சாதாரண குணாதிசயம் அப்படியே…

ஒருநாள் அவரை சந்திக்க, அவரின் அழைப்பின் பேரில் சென்றிருந்த வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் கூட பொறுமையிழந்து – அந்த அம்மா தேவையானால் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கலாம் என்று கூறி விட்டு சென்றதாகவும் அப்போது செய்திகள் சொல்லப்பட்டன.

இது சந்திரிகா தற்போதைய அரசியல் முடிவு எடுத்தமைக்காக அல்லது அதற்கெதிரான பதிவல்ல. கோட்டாபய அல்லது அனுரவை அவர் ஆதரித்தாலும் என் நிலைப்பாடு இதுதான்.

அமைதி சமாதானம் ஏற்படுத்துவதாக கூறி அரசியலுக்கு வந்து பின்னர் நாட்டை நாசமாக்கிய சந்திரிகா அம்மையார், இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்கள் முன் வருகிறார் என்று தெரியவில்லை.

சந்திரிகா குறித்து பேட்டி ஒன்றை வழங்கியிருந்த – அவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் அஷ்லி வில்ஸ், அப்போதைய ரணிலின் ஆட்சியை ஒழுங்காக நடத்த விடாமல் பொறாமைக் குணத்தால் சந்திரிகா செய்த வேலைகளை புட்டுப்புட்டு வைத்திருந்தார்.

இப்போது, ….வேதம் ஓதலாமா?

இதெல்லாம் தெரியாமலா சந்திரிகா உள்ளே வர ரணில் அனுமதித்திருப்பார்?

ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, மைத்திரி ஜனாதிபதியானதும் நாய்க் கூட்டில் அடைப்போம் என்று கூறிய இவர், தற்போதை அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசார தேரர் செய்த எந்தக் காரியத்துக்கு எதிராகவும், ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்