போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்
போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது.
பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு ரோபோகள் பயன்படுத்தப்படுகின்றமை இதுவே முதல்தடவையாகும்.
சீன அரசிடமிருந்து இந்த ரோபோகளை பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.