தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி

🕔 October 31, 2019

னாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகிறது.

இம்முறை 659,514 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவானோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குமாகும்.

இதன் காரணமாக நபரொருவர் வாக்களிப்பதற்கு எடுக்கும் நேரம் அதிகரிக்கும் சந்தர்பம் உள்ளது.

தேர்தல் சட்டத்தில் ஒருவர் வாக்களிப்பதற்கு எடுக்க வேண்டிய நேரம் பற்றிய வரையறைகள் என எதுவும் இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்