சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

🕔 October 30, 2019

க்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நீக்கப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கூறியுள்ளார்.

தற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார்.

கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், இவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அண்மையில் இவர் சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றினை எழுதியிருந்ததோடு, அந்தக் கடிதத்திலுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்காது விட்டால், தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பின் போது, பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வசந்த சேனநாயக்க ஆதரவு வழங்கி விட்டு, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் திரும்பி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்