ஜனாதிபதி சுற்றாடல் விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வென்றது: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

🕔 October 29, 2019

– றிசாத் ஏ காதர் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில், தேசிய ரீதியாக தங்கவிருதும், தேசிய பசுமை அறிக்கை வெளியீட்டில் சிறப்பு விருதும் கிடைத்துள்ளன.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இவ்விழா இடம்பெற்றது.

இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.ஐ.எம். ஜவாஹிர் தங்கவிருதினையும், டொக்டர் எம்.ஜே. நௌபல் சிறப்பு விருதினையும் பெற்றுக் கொண்டனர். 

இது தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிர் கருத்து தெரிவிக்கையில்; “இவ்விருதினைப் பெற்றுக் கொள்ள வைத்தியசாலையின் சகல ஊழியர்களினதும் ஒத்துழைப்பு கிடைத்தது” என்றார்.

“தர முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே. நௌபல், சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் பி.கே. ரவீந்திரன், வைத்தியசாலை கழிவு முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம். ரெமன்ஸ் ஆகியோரின் அர்பணிப்பான சேவை” இந்த விருது கிடைப்பதற்கு விடேச காரணமாக அமைந்திருந்தது” என்றும் அவர் கூறினார்.

வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம் ஜவாஹிர் தலைமையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பல்வேறு சாதனைகளைப் தொடர்ச்சியாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி பசுமை விருது வழங்கும் விழாவில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்