மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நீடித்துள்ளது.
டிசெம்பர் 10 ஆம் திகதி வரை, இந்த இடைக்கால தடையுத்தரவை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார்.
அதற்கு எதிராக, உச்ச உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம், மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.