ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம்
ஆளுநர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக முறையிடுவதற்கு, தேர்தல்வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளது.
வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கு பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலைத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்துள்ளார்.