மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்

🕔 October 24, 2019

– புதிது ஆசிரியர் –

யங்கரவாதி சஹ்ரானுடன் மு.காங்கிரஸ் தலைவர் காணப்படுகின்ற படமொன்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அண்மைக் காலமாக உலவி வருகின்றது.

இந்த படத்தை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மெளலவி எம். மிப்லால் என்பவர், பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று புதன்கிழமை இரவு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அதிர்வு’ நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; சஹ்ரானும் தானும் காணப்படுகின்ற படத்தை ‘புதிது’ செய்தித்தளம் நீண்டகாலத்துக்கு முன்பே வெளிபிட்டிருந்ததாக குற்றம் சாட்டியிருக்கின்றான்றார்.

அதேவேளை, இந்தப்படத்தை வெளியிட்டமையானது ஒரு கொந்தராத்து வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி, மு.காங்கிரஸ் தலைவர் காணப்படுகின்ற எந்தவொரு படத்தினையும், ஒருபோதும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டிருக்கவில்லை என்பதை, மிகவும் பொறுப்போடு ‘புதிது’ செய்தித்தள ஆசிரியர் பீடம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆனாலும், அந்தப் படங்களை ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டதாக மு.காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது, வழமை போன்று அவர் பேசும் பொய்களில் ஒன்று என எடுத்துக் கொள்ளலாம். அல்லது, புதிது செய்தித்தளம் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள நீண்ட கால கிலேசம் அல்லது அதிருப்தியின் வெளிப்பாடு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அவலை நினைத்து உரலை இடிப்பது போல், ‘புதிது’ செய்தித்தளம் மீது இந்தக் குற்சாட்டினை மு.கா. தலைவர் சுமத்தியிருக்கிறார் என்பதை, புரிந்து கொள்ள முடிகிறது.

மு.காங்கிரஸ் தலைவர் குறித்து குமாரி கூரே வழங்கிய பேட்டியை ‘புதிது’ செய்தித்தளமே ஊடகமெனும் வகையில் முன்முதலாக வெளிக் கொண்டு வந்தது. பரபரப்புப் பெண் ஒருவருடன் மு.கா. தலைவர் ஆற அமர இருந்து பேசிக் கொண்டிருக்கும் படம் ஒன்றினையும் ‘புதிது’ செய்தித்தளம் சில காலங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், சஹ்ரானுடன் மு.கா. தலைவர் காணப்படும் படத்தை வெளியிட வேண்டுமாயின், அதனை ‘புதிது’ செய்தித்தளம் கச்சிதமாக செய்து முடித்திருக்கும். ஆனாலும், அந்தப் படத்தை வெளியிடுவதில்லை என்பதில் இன்றுவரை, ‘புதிது’ செய்தித்தளம் உறுதியாகவே இருந்து வந்தது.

இருந்த போதும், ஏனைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சஹ்ரானும் மு.கா. தலைவரும் காணப்படும் படங்கள் வெளியானமையினை அடுத்து, அவை குறித்து மு.கா. தலைவர் வழங்கிய சுய விளக்கங்களை ‘புதிது’ வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரஸ் தலைவரின் சுயவிளக்கச் செய்திகளை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு மு.காங்கிரஸ் ஊடகப்ப பிரிவு அனுப்பி வைத்திருந்தது.

எனவே, இனிவரும் காலங்களிலாவது பொது வெளியில் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘புதிது’ செய்தித்தளம் பற்றிய கிலேசத்தை துறந்து விட்டு, மு.கா. தலைவர் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மறுபுறம், ‘புதிது’ செய்தித்தளம் குறித்து, தான் முன்வைத்த தவறான குற்றச்சாட்டை மு.கா. தலைவர் பொதுவெளியில் திருத்திக் கொள்வார் என்றும், அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கிறோம்.

அதிர்வில் ‘புதிது’ குறித்து, ஹக்கீம் முன்வைத்த குற்றசாட்டு வீடியோ

தொடர்பான செய்தி: தனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்