காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு

🕔 October 20, 2015

Book release - 012
கா
வலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது.

வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞ‌ருமான மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  நூல் அறிமுக உரையினை ‘செல்லமுத்து வெளியீட்டக’ இயக்குனரும், ‘கனடா படைப்பாளிகள் உலகம்’ இலங்கை ஒருங்கிணைப்பாளருமான‌ யோ. புரட்சி நிகழ்த்தினார்.

யாழ். இலக்கியக்குவிய தலைவர் டொக்டர் வேலணையூர் தாஸ் நூலினை வெளியிட்டு வைக்க, முதற் பிரதியினை அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த படைப்பாளர் எம்.ஐ.எம். நாளீர் பெற்றுக்கொண்டார்.

இதன்போது, கவிஞர் வே. முல்லைத்தீபன் தலைமையில் கவியரங்கொன்றும்  இடம்பெற்றது. இதில் கவிஞர்கள் மல்லாவி கஜன், முல்லைக்கவி தனூஜா, மன்னார் பிரதீப், நெடுந்தீவு தனு, நெடுந்தீவு அரவிந், முல்லைதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செல்லமுத்து வெளியீட்டகம்’, ‘படைப்பாளிகள் உலகம்’ ஒத்துழைப்போடு நூல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Book release - 013Book release - 014

Comments

புதிது பேஸ்புக் பக்கம்