ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள்

🕔 October 20, 2019

னாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்பட்ட 1,034 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (19ஆம் திகதி) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 992 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 96முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்