700 மில்லியன் விவகாரம்; பதவியிழந்தார் சுஹைர்

🕔 October 19, 2015

Zuhair MP - 0111தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம். சுஹைர், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரபல சிங்கள மொழி கலைஞர் ஒருவரின் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாடகத் தயாரிப்பு ஒன்றுக்காக, 700 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு, தனது பதவியைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரின் பதவி நீக்கத்தினையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சுனில் எஸ் சிறிசேன என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியபோது, அவரை சுஹைர் ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுஹைர் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும், ஈரான் நாட்டுக்கான இலங்கை தூதுவராகவும் பதவி வகித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்