பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம்
பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு – 07, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் கிடைத்தது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.