கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன், 52 நாள் அரசியல் குழப்பத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.