எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது.
அந்த வகையில் பொது பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 07 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகளைப் பெற்று 03 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.
2018 ஜனவரி 30 ஆம் திகதி உயர் நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.