தேர்தல் களம்: 24 மணி நேரத்தில் 46 முறைப்பாடுகள்

🕔 October 10, 2019

தேர்தல்கள் சட்டத்தை மீறியதாக 46 முறைப்பாடுகள் 24 மணி நேரத்தில் பதிவானjhf தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

நேற்றைய தினத்துக்கு முந்தைய 24 மணி நேரத்தில், இந்த சட்ட மீறல்கள் இடம்பெற்றிருந்ததாக, தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் பதிவாகியுள்ளது.

இவற்றில் தேர்தல் சட்டத்தை மீறிதாக 45 முறைப்பாடுகளும், அச்சுறுத்தியமை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணை நிலையங்களுக்கு தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு அச்சுறுத்தல் பற்றியதாகும்.

வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமை முடிவடைந்தவுடன் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்