ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் வாக்களிக்க 07 லட்சம் பேர் விண்ணப்பம்
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதியும் அடுத்த மாதம் 01 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.