கட்டுப் பணம் செலுத்திய 41 பேரில், 35 பேர் வேட்பு மனுத் தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 09 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலிற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில், 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உட்பட 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.