ஜனாதிபதி தேர்தல்: இன்று 11.30 வரை வேட்பு மனுத் தாக்கல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணி வரையில், தேர்தல்கள் ஆணையக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. இது வரையில் மொத்தமாக 41 பேருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிகழ்வு அனைத்து தொலைக்காட்சி அலைவரிவைகளிலும் நேரடியாக ஒளிப்பரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதையொட்டி பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அடங்கலாக 1700 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.