ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு
– பாறுக் ஷிஹான் –
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவின் படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றுக்கு கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளன.
‘புதிய இலங்கையை நோக்கி’ எனும் தலைப்பிடப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த மேற்படி ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமதாசவின், சில சுவரொட்டிகளுக்கு கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளமையினைக் காண முடிந்தது.