ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை

🕔 October 6, 2019

– புதிது செய்தியாளர் –

னாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள போதிலும், அவர்களில் சிலர் – வேட்பு மனுவினை சமர்ப்பிக்க மாட்டார்களென அறிய முடிகிறது.

அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.

இவர்களில் 04 பேர் முஸ்லிம்கள்; இருவர் தமிழர்களாவர்.

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இஸ்யாஸ் ஐதுருஸ் மொகம்மட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அலவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் எஸ். குணரத்னம் ஆகியோரே மேற்படி ஐவருமாவர்.

ஜனாதிபதி தேர்தலென்றில் கட்சியொன்று சார்பாக சாதாரண பொதுமகன் ஒருவர் போட்டியிடலாம். ஆனால், சுயேட்சையாகவெனில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்.

கட்சியின் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாவினையும், சுயேட்சை வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப் பணமாக செலுத்துதல் வேண்டும்.

கடடுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவடைந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்