பூஜித் ஜயசுந்தர, ஹெமசிறி ஆகியோரின் கணக்கு விவரங்களை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோரின் கணக்குகள் பற்றிய விவரங்களை 80 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெற்று வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.