சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

🕔 October 2, 2019

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றுக்கு விண்ணப்பித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்காகவே, இவர் இந்த அனுமதியைக் கோரியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னராக, சத்திர சிகிச்சையொன்றுக்கு கோட்டா உட்படிருந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், நீதிமன்றில் இருவர் மனுத்தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழங்கில், கோட்டாவுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என, அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்