தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் தாமரை மொட்டை தவிர வேறு சின்னத்தில் கூட்டணியமைத்து போட்டியிடுவதற்கு முன்வராது விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது தரப்பின் நிலைப்பாட்டினை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கூட்டணி அமைக்கப்படும் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.