பொத்துவில் பிரதேச சபை செயலாளர் விபத்தில் மரணம்
– கலீபா –
பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தி. சாயிதாசன் (33 வயது) நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்தார்.
தம்பிலுவில் பிரதேசத்தில் நடந்த மோட்டார் பைக் விபத்தில் சிக்கியே, இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் அக்கரைப்பற்று – பனங்காடு எனும் இடத்தை சேர்ந்தவராவார்.
அம்பாறை சுகாதார சேவைகள் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிவந்த நிலையில், அதிசிறப்புத் தகைமை சித்தியெய்து 2018 ஏப்ரல் மாதம் தொடக்கம் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராக தனது கடமையை மேற்கொண்டு வந்தார்.
பிரேத பரிசோதனைகளுக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாயில் பிரேதம் வைக்கப்பட்டுள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.