கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது

🕔 September 29, 2019

கொக்கேய்ன் வில்லைகளை விழங்கிய நிலையில் வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகி உள்ளார்.

கட்டாரிலிருந்து வந்த இந்தப் பெண் தொடர்பில் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டமையினால், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உற்படுத்திய போது அவரது வயிற்றில் வில்லைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரியின் வயிற்றலிருந்து 52 கொக்கேய்ன் வில்லைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்