சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

🕔 September 28, 2019

பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் மண்டபத்தில்  நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள்  சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அமைச்சர் மனோ கணேசனின்  வழிகாட்டலில், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.ஆர்.எம்.  றிஸ்கான் மேற்கொண்ட முயற்சியினால்  இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்பட்டது.

சிலோன் மீடியா போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் இரண்டாம் மொழியினை விருத்தி செய்யு முகமாக இந்தக் கற்கைநெறி சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் மற்றும் நிந்தவூர்  பிரதேச சபை மண்டபத்திலும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸன் பிரதம விருந்தினராகவும் அம்பாறை மாவட்ட செயலக  தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. பிரதீஸ்கரன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜவ்பர், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். அன்சஹான், அம்பாறை மாவட்ட  முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். டில்சாத், சிலோன் மீடியா போரம் தலைவர் றியாத் ஏ மஜீத், சிலோன் மீடியா போரம் செயலாளர் எ.எஸ்.எம். முஜாஹீத், சிலோன் மீடியா போரம் பொருளாளர் நூறுல் ஹூதா, அம்பாறை மாவட்ட தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரீ. தர்மேந்திரா மற்றும் இக் கற்கை நெறியினை திறம்பட விரிவுரையாற்றிய ஆசிரியர்களான என்.எம்.எம். புவாட்,
ஏ.எம். முஜீப், ஏ.பி. ஆரிப், கே.பி. பிரதீப் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்  

இதில் வெற்றிகரமாக இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த  ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது.

100 மணித்தியாலயங்கள் கொண்ட இக்கற்கை நெறி,  12 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்