ஜனாதிபதி தேர்தல்: 08 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

🕔 September 27, 2019

னாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 08 வேட்பாளர்கள் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் சார்பாக ஐவரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் நிறைவடையும்.

ஐக்கிய சோசலிச கட்சி சார்பாக சிறிதுங்க ஜயசூரிய நேற்று, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்