ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; ரணில் விக்ரமசிங்கவே பிரேரிக்கவுள்ளார்

🕔 September 26, 2019

க்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரேரிக்க உள்ளார் எனத் தெரியவருகிறது.

அமைச்சர் நவீன் திசாநாயக்க இதனை இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகைளில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்த வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.

செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக, கட்சியின் தலைவர் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

முன்னதாக, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க முடியும் என, ரணில் விக்ரமசிங்க தெரிவித்தித்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆயினும், நிபந்தனைகள் எவற்றுக்கும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சஜித் பிரேமதாஸ கூறியதாகவும், இதனையடுத்தே தற்போதைய முடிவுக்கு ரணில் வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்