சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

🕔 September 23, 2019

ம்பதாயிரம் ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் முக்கிய அமைச்சர் ஒருவர் ‘கொமிஷன்’ கோரியதாகத் தெரியவருகின்றது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த அமைச்சருக்கு 50 மில்லியன் ரூபா (05 கோடி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 80 ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் தேவையாக உள்ள நிலையில், 50 ஆயிரம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை, அண்மையில் அமைச்சரவை வழங்கியிருந்ததாகவும் அந்த ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சோளம் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

கடந்த மகா போகத்தின் போது சேனா படைப்புழு தாக்கத்தினால், சோளச் செய்கை 80 வீதம் அழிந்து போனமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்