ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

🕔 September 19, 2019

னாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மூன்று வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் சுயேட்சை அணியினர், ஒருவர் சோஷலிச கட்சி வேட்பாளராவார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை இன்று வியாழக்கிழமை தொடக்கம், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி வரை செலுத்த முடியும்.

அந்த வகையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியோரின் விவரம் வருமாறு;

01) ஜயந்த கெட்டாகொட – சுயேட்சை வேட்பாளர்

02) சிறிபால அமரசிங்க – சுயேட்சை வேட்பாளர்

03) டொக்டர் அஜந்த பெரேரா – சோஷலிச கட்சி வேட்பாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்