கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

🕔 September 18, 2019

ஸ்டர் தினத்தன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் உடற் பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் எனும் மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை ஏற்பதற்கு அவரின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தமையினை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று சஹ்ரான் ஹாசிம் தலைமையில், இலங்கையிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்