பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸார் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்குரஸ்ஸ – பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீது, மோட்டாளர் பைக்கில் வந்த, அடையாளம் காணப்படாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்சிலேயே, இவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்துக்குரிய மோட்டார் பைக்கை நிறுத்துமாறு மேற்படி பொலிஸார் சைகை செய்த போதும், அதனை மீறிச் சென்றவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பொலிஸார் இருவரும் காயமடைந்தனர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.