ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் நேற்று வியாழக்கிழமை அலறி மாளிகையில் பிரதமர் ரணில் கலந்துரையாடினார்.
இதன்போதே, மேற்படி விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டொரு நாட்களில் ஐ.தே.கட்சி சார்பான ஜனாதிபதி வேட்பாளரை அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார் என்று, ஐ.தே.கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மு.காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.